1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வைரல் வீடியோ!!
சீனாவின் கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 1180 அடி உயரத்தில் மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் 872 அடி நீளளும் 6.6 அடி அகமும் கொண்டுள்ளது. கண்ணாடி பாலத்தில் இருந்து மலையை பார்க்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பாலத்தை முதல் முறை பார்க்க வருபவர்களை அலற விடுகிறது அதன் செட் அப். அதாவது, பாலத்தில் கால் வைத்தவுடன் பயங்கர சத்ததுடன் பாலத்தில் விரிசல் விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் திணறுகின்றன. பலர் பாலத்தில் விழும் விரிசல் உண்மை என்று பயத்தில் அலறுகின்றனர்.
உண்மையில், கண்ணாடி பாலம் வலுவாக உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கை வண்ணம். பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இந்த திகில் அனுபவத்தை உருவாக்கியுள்ளனர்.