Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2 இன்ச் உயரம் குறைந்த பாவாடையால் ரூ.50 ஆயிரம் அபராதம்

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (01:05 IST)

Widgets Magazine

டெல்லியில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய திருமண தினத்தன்று அணியும் பாவாடையின் உயரம் 2 இன்ச் குறைவாக இருந்ததாக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார். இதனால் அந்த பாவாடையை தைத்து கொடுத்த டிசைனருக்கு ரூ.50 ஆயிரம் நீதிமன்றம் அபராதம் விதித்தது. 
 
டெல்லியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2008ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக லெஹாங்கே (lehanga) என்று கூறப்படும் திருமண உடையை தைக்க கொடுத்திருந்தார். இது நம்மூர் பாவாடையை போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாவாடையின் உயரம் அவர் கொடுத்த அளவைவிட 2 இன்ச் குறைவாக இருந்ததாம். உயரத்தை சரிசெய்து கொடுக்க அந்த பெண் கேட்டபோது அதிகப்படியான வேலைப்பளு இருந்ததால் டிசைனர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து அந்த பெண் தொடுத்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் தற்போது டிசைனர் ரூ.50,000 அபராதமும், அந்த பாவாடையின் மதிப்பான ரூ.14 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.64 ஆயிரம் அந்த பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டது.  


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சசிகலா டிஸ்மிஸ் என்றால் ஆட்சியும் டிஸ்மிஸ்? பதிலடி கொடுக்க தினகரன் தயார்

அதிமுக பொதுகுழு நாளை கூட எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிமன்றம் மீண்டும் உறுதி ...

news

கமல்ஹாசனின் மற்றொரு புரியாத டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவிலும் ஒரு அரசியல் பரபரப்பு ...

news

நீட் தேவையா? வேண்டாமா?, அனிதாவா? காய்கறி விற்ற மாணவர்களா?, எது சரி? எது தவறு?

ஒரு பக்கம் அரியலூர் மாணவி 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் ...

news

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக சார்பில் சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என ...

Widgets Magazine Widgets Magazine