Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலுக்காக ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை தூக்கி எறிந்த இளம்பெண்...

Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (16:04 IST)

Widgets Magazine

தான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக, கோடிக்கணக்கான சொத்துக்களை ஒரு இளம்பெண் தியாகம் செய்த விவகாரம் மலேசியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மலேசியாவில் வசிக்கும் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் கோ கே பெங்.. இவரின் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. தொழிலதிபரான இவர்,  பல்வேறு முக்கிய நட்சத்திர விடுதிகளின் அதிபராகவும், பங்குதாரராகவும் இருக்கிறார். முக்கியமாக, மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளராக திகழ்கிறார்.
 
இவரின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ என்பவர், இங்கிலாந்தில் படிக்கும் போது தனது கல்லூரி நண்பர் ஜடிடிஹா என்பவரை காதலித்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால், அவரின் காதலை அவரின் தந்தை கோ கே பெங் ஏற்கவில்லை. 
 
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்தால் அவருக்கு சொத்துக்கள் எதுவும் கிடைக்காது என்பதை அறிந்தும், சமீபத்தில் எளிமையாக தனது நண்பர்கள் முன்னிலையில் ஜடிடிஹாவை  ஏஞ்சலின் திருமணம் செய்து கொண்டார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஏஞ்சலின் “ எனது தந்தையின் நிலைப்பாடு தவறானது என நான் கருதினேன். அதனால், என் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன். உங்களிடம் பணம் இருந்தால் நினைத்ததை வாங்க முடியும். ஆனால், அதோடு மற்றவர்களை ஆதிக்கம் செய்யும் மனநிலையும் ஏற்படும். கோடிக்கணக்கான சொத்துக்களையும், பணத்தையும் இழந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சிக்கனமாய் வாழ்வது எப்படி என்பது எனக்கு தெரியும்” என அவர் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆசிரியருடன் பள்ளி மாணவி காதல்: வகுப்பறையிலே உல்லாசம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவி ஒருவருடன் மிகவும் நெருக்கமாக ஆபாசமாக ...

news

பாஜகவுக்கு தனியான ரூ.500 நோட்டு அச்சடிப்பு? காங்கிரஸ் திடுக்கிடும் புகார்

பாஜக கட்சிக்கு தனியாக ரூ.500 நோட்டு அச்சடிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் திடுக்கிடும் ...

news

மாடல் அழகியை கடத்தி, செக்ஸ் அடிமையாக விற்ற நபர்!!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவரை ஆன்லைனில் செக்ஸ் அடிமையாக விற்க கடத்தப்பட்ட சம்பவம் ...

news

ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன்தான் சிறந்த தலைவர் என அதிமுகவின் ...

Widgets Magazine Widgets Magazine