Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த 28 வயது மருத்துவர்!

விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த 28 வயது மருத்துவர்!

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:49 IST)

Widgets Magazine

அமெரிக்காவில் விமானத்தில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


 
 
கடந்த ஜூலை 23-ஆம் தேதி அமெரிக்காவின் சியாட்டில் இருந்து நியூஜெர்சி சென்று கொண்டிருந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனியாக பயணித்துள்ளார்.
 
அப்போது அந்த சிறுமியின் அருகில் 28 வயதான விஜயகுமார் கிருஷ்ணப்பா என்ற இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பயணித்துள்ளார். இந்நிலையில் சிறுமி தூங்கிக்கொண்டு இருந்ததால் அந்த மருத்துவர் தனது கையை சிறுமியின் தொடையில் வைத்து தனது பாலியல் சேட்டையை ஆரம்பித்துள்ளார்.
 
அந்த மருத்துவர் தனது பாலியல் சில்மிஷத்தை தொடங்கியதும் திடுக்கிட்டு எழுந்த சிறுமி அவரது நடவடிக்கை குறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து அந்த மருத்துவர் வேறு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சிய மருத்துவர் கிருஷ்ணப்பா வேக வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.
 
ஆனால் அந்த சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோர்களிடம் கூற, அவர்கள் விமான் நிறுவனம் மீதும் அந்த மருத்துவர் மீது புகார் அளிக்க, இந்த வழக்கு எஃப்பிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
அவர்கள் விசாரணை நடத்தி மருத்துவர் கிருஷ்ணப்பாவை கண்டுபிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை செய்தனர். மேலும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள அவருக்காக வாதாட நீதிமன்றம் வக்கீல் ஒன்றை நியமித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆட்சியை கலைக்க சதி: அமைச்சர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். அதன் பின்னர் எடப்பாடி ...

news

சேகர் ரெட்டி விவகாரம்: வழக்கை சந்திக்க ஓபிஎஸ் தயார்!

சேகர் ரெட்டி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு இருக்கிறது, ...

news

திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு ரகசிய கூட்டணியா? ஓபிஎஸ் கேள்வி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மத்திய பாஜகவின் கைப்பாவையாக ...

news

விஜய் ரசிகர்கள் மீது பிரபல பெண் பத்திரிகையாளர் புகார்?

ஆங்கில ஊடகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தனது ...

Widgets Magazine Widgets Magazine