கார் மேலே ஏறியும் உயிர் பிழைத்த பெண்! – வைரலான வீடியோ!

CHINA
Prasanth Karthick| Last Modified புதன், 16 அக்டோபர் 2019 (17:29 IST)
சீனாவில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் மீது காரை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மான்சன் சிட்டியில் உள்ள ஒரு சாலையில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் வலதுபக்கம் திரும்பும்போது எதிரே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் சாலையில் வீசியெறியப்பட்டார் அந்த பெண்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கார் டிரைவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த பெண்ணை தூக்க ஓடி வந்தார். அதற்குள் அந்த பக்கமாக வந்த மற்றொரு கார் அந்த பெண் சாலையில் கிடப்பதை கவனியாமல் அந்த பெண் மேல் ஏறியது. உடனே காரை அப்படியே நிறுத்திய அந்த கார் டிரைவர் வெளியே வந்து சுற்றியிருந்தவர்கள் உதவியுடன் காரை பக்கவாட்டில் தூக்கி, காருக்கு அடியே சிக்கிய அந்த பெண்ணை மீட்டனர்.

இரண்டு கார்களால் தொடர்ந்து அடிபட்ட அந்த பெண் அதிர்ஷ்டவசமாக சில காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த பெண் விபத்துக்குள்ளான வீடியோவை சீன தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :