புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (07:25 IST)

டெலிகிராம் செயல் அதிகாரி பாவெல் துரோவின் கைது.. -பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விளக்கம்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் டெலிகிராம் செயல் அதிகாரி பாவெல் துரோ கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விளக்கம் அளித்தல் போது இந்த கைது அரசியல் ரீதியானது அல்ல என்று கூறியுள்ளார்.

டெலிகிராம் செயல் அதிகாரி பாவெல் துரோ சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது அரசியல் ரீதியானது அல்ல என்றும் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த நீதி விசாரணையின் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு அதிபராக நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்றும் அந்த வகையில் சட்டத்திற்கு உட்பட்டு தான் பேச்சு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நீதித்துறையின் கையில் தற்போது உள்ளது என்றும் நீதித்துறை சரியான நடவடிக்கை தான் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டது அரசியல் ரீதியானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva