திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (16:54 IST)

திடீரென குறைந்த ஃபாலோவர்கள்.. மார்க்குக்கே இந்த நிலமையா? – அதிர்ச்சியில் பேஸ்புக் யூசர்கள்!

பிரபலமான பேஸ்புக் செயலியை உலகம் முழுக்க பலரும் பயன்படுத்தி வரும் நிலையில் பலருக்கு அதில் தங்கள் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயலிகளில் முக்கியமான ஒன்று பேஸ்புக். மார்க் ஸுக்கெர்பெர்க்கால் உருவாக்கப்பட்ட பேஸ்புக்கில் பல கோடி மக்கள் கணக்குகள் வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் ஒரு நபர் தன் கணக்கிலிருந்து அதிகபட்சம் 5 ஆயிரம் பேருடன் மட்டுமே நட்பில் இருக்க முடியும். இதனால் குறிப்பிட்ட நபருக்கு 5 ஆயிரம் நண்பர்களுக்கான லிமிட் முடிந்துவிட்டாலும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்புபவர்களுக்காக Follow என்ற ஆப்ஷனை பேஸ்புக் வழங்கியுள்ளது.


இந்த வசதி மூலமாக எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஒரு நபரை பின் தொடர முடியும். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கெட்பெர்க்கிற்கே அவரது கணக்கில் 100 மில்லியன் ஃபாலோவர்கள் இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முதலாக உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களின் ஃபாலோவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

100 மில்லியன் ஃபாலோவர்கள் கொண்டிருந்த மார்க்கின் ஃபாலோவர் எண்ணிக்கை தற்போது வெறும் 9993 ஆகியுள்ளது. அதுபோல லட்சக்கணக்கில் ஃபாலோவர்கள் கொண்டிருந்த பலருக்கு ஃபாலோவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்குள் மட்டுமே காட்டுவதால் அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது ஏதும் தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து இதுவரை மெட்டா நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By: Prasanth.K