செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (10:28 IST)

விந்தணு தானம் மூலமாக 128 குழந்தைகள் பிறப்புக்குக் காரணமாக இருந்த நபர்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிளைவ் ஜோன்ஸ் என்ற 66 வயது நபர் விந்தணு தானம் மூலமாக இதுவரை 128 குழந்தைகள் பிறப்புக்குக் காரணமாக இருந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் விந்தணு தானம் அளிக்க 45 வயதுக்குள்தான் இருக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளால சமூகவலைதளங்கள் மூலமாக இலவசமாக விந்தணுக்களை தானம் அளித்து வருகிறார் கிளைவ் ஜோன்ஸ். இவர் அளித்த தானத்தின் மூலம் இதுவரை 128 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் இப்போது 9 பேர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இன்னும் சில ஆண்டுகள் இந்த தானத்தை அவர் தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய இலக்காக 150 குழந்தைகள் என்பதை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.