செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (08:25 IST)

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: அதிபர் கோத்தபய உத்தரவு!

இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்போவதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபாய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர் என்பதும் சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வு வழங்க இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மேலும் பாதுகாப்பு படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது