வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (13:56 IST)

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிங்க..! – பிரதமரிடம் கோரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!

இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் குறித்த கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் அங்கு தங்கிய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி மற்றும் மேம்பாடு குறித்தும் பேச உள்ளார்.

இன்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார். அதில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் தமிழ் மக்களுக்கு தேவையான மருந்துகள், உணவு உள்ளிட்டவற்றை யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தமிழக அரசு வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.