வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (12:21 IST)

டிரம்ப் போல் என்னையும் 2 முறை கொலை செய்ய முயற்சி நடந்தது: எலான் மஸ்க் திடுக் தகவல்..!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சமீபத்தில் கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில் என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் ’கடந்த எட்டு மாதங்களில் என்னை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறியுள்ளார்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் ஆபத்தான காலம் வரும், கடந்த எட்டு மாதங்களில் என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது, இரண்டு பேர் தனிதனி சந்தர்ப்பங்களில் என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர். டெக்சாஸில் உள்ள டெஸ்லா தலைமையகத்துக்கு அருகில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கொலை செய்யும் முயற்சியால் அமெரிக்க மக்கள் பரபரப்பில் இருக்கும் நிலையில் மஸ்க் செய்த இந்த பதிவுக்கு பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran