வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2024 (14:03 IST)

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது : ராகுல் காந்தி

Rahul Gandhi
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலை அடைந்தேன். இது மாதிரியான செயல்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
 
விரைவில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பல இந்திய அரசியல்வாதிகள் டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ராகுல் காந்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva