Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூமியை தாக்கும் சூரிய புயல்: விளைவுகள் என்ன?

Last Updated: புதன், 14 மார்ச் 2018 (13:52 IST)
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சூரியனில் ஏற்பட இருக்கும் புயல் பூமியை தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
சூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய தீப்பிழம்புகள் உருவாகி உள்ளனவாம். இந்த தீப்பிழம்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிக திற்னுடன் இருப்பதால் ஏற்படும் புயல் பூமியை தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சூரியனில் இருந்து வெளியாகும் தீப்பிழம்புகள் பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாக உருவெடுத்து தாக்குமாம். இதனால் பூமியின் இயர்கை தன்மை மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, பூமியை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். விமானங்களின் ஜிபிஎஸ் சிஸ்டம் பாதிப்பு, பூமியில் சில இடங்களில் மின் வினியோக பாதிப்பி ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :