செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 மே 2023 (17:30 IST)

மே 31ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சில உள்ளூர் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சித் தலைவரே உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருவார் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் மே 31ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். கரூரில் உள்ள மகா மாரியம்மன் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும்.
 
இந்த விழா வரும் மே 31ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனை அடுத்து கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
உள்ளூர் விடுமுறை நாளான மே 31ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் மூன்றாம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva