இனச்சேர்க்கைக்காக பூமிக்கு வரும் ஏலியன்ஸ்? இது சாத்தியமா?

Last Updated: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (14:15 IST)
ஏலியன்ஸ் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் பல கற்பனை தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டேதான் இருக்கிறது. 
 
மனிதர்களை விட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அபூர்வமான சக்தியை படைத்த ஒன்றாக இந்த ஏலியன்ஸ் இருக்கும் என்பது நாசாவின் கூற்று. 
 
ஏலிய்னஸ் பூமிக்கு வரும் சமயத்தில் அப்போது அதனுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில், மனித இனமே அழியவும் வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் மறைந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மூலம் வெளிவந்தது.
 
அந்த வகையில் தற்போது சில ஏலியன்கள் பூமிக்கு இனச்சேர்க்கைக்காக வந்து செல்கின்றன எனவும் பூமியில் இருக்கும் போது ஏலியன்கள் கார்பன் உடல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால், அதனை எளிதில் காண இயலாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் வெறும் வதந்தியே என கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :