வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (12:27 IST)

பூமியை கடக்கும் விண்கல்: ஆபத்துகள் குறித்த அலசல்...

DC4 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் இன்று பூமியை கடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 
 
DC4 என்ற இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 42,000 கிமீ தொலைவு வரை வந்து செல்லவிருக்கிறதாம். சுமார் 50 முதல் 100 அடி வரை அகலம் கொண்டுள்ளது இந்த விண்கல்.
 
இந்த விண்கல் 2012 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம், 12 ஆம் தேதி அன்டார்டிகா கண்டத்துக்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
 
இது 42,000 கிமீ தொலைவிலேயே பூமியை கடந்துவிடுவதால், அது பூமியுடன் மோதும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
அதோடு இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.