கொரனாவிலிருந்து காப்பாற்ற நாய்களுக்கு முகமூடி; மும்முரமாக செயல்படும் சீனர்கள்
கொரனா வைரஸ் நாய்களுக்கு பரவாமல் இருக்க பிரத்யேகமாக முகமூடி வாங்குவதில் சீனர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரனா வைரஸால் சீனாவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இலங்கை. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் கொரனா பரவாமல் இருப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் தங்கள் செல்லப்பிராணிகளான நாய்களுக்கு கொரனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக சீனர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நாய்களுக்காக பிரத்யேகமாக சீன மருத்துவமனைகளில் முகமூடிகள் விற்பனையாகிறது. வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகம் இந்த முகமூடிகள் விற்பனையாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளிடம் இதுவரை வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.