செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:30 IST)

கரண்ட் பில்லை மிச்சப்படுத்த புதிய நிலவு! - சீனாவின் திட்டம்!

மின்சார செலவை மிச்சப்படுத்த அடுத்த ஆண்டு செயற்கை நிலவை விண்ணில் ஏவ இருக்கிறது சீனா.

சீனாவில் உள்ள நகரங்களில் சாலைகளில் தெரு விளக்குகள் அமைப்பதற்கும், அதை பராமரிப்பதற்கு சீனாவுக்கு ஏகப்பட்ட செலவாகிறது. மேலும் எதிர்காலத்தில் மின்சார பற்றாக்குறை சீனாவில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையை சமாளிக்க சீனாவின் நகரங்களுக்கு மேல் பிரகாசிக்கும் செயற்கை நிலவை அமைக்க சீனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது.

அதன்படி ஏறத்தாழ செயற்கை நிலவை அனுப்ப அனைத்து பணிகளையும் முடித்துவிட்ட சீன விண்வெளி ஆய்வு மையம் அடுத்த ஆண்டு அதை விண்ணில் ஏவவும் தயாராகி வருகிறது. பூமியிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கை நிலவு சூரிய ஒளியை உள்வாங்கி இரவு நேரத்தில் பிரகாசிக்கும் என சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் விண்ணில் இருக்கும் செயற்கை நிலவை பூமியிலிருந்தபடியே இயக்கவும், ஒளியை கட்டுப்படுத்தவும் முடியும் என கூறியுள்ளனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு 24 மில்லியன் டாலர்கள் வரை மின்சார தொகையை மிச்சப்படுத்த முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் சீனா அனுப்பும் இந்த நிலவால் ஒளி மாசு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என மற்ற நாட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.