1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 17 மே 2024 (13:08 IST)

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

adhani
இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமம் பல நாடுகளிலும் முதலீடு செய்து வரும் நிலையில், நார்வே நாட்டில் அதானி நிறுவனம் முதலீடு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நிறுவனமான அதானி குழுமம் உலகம் முழுவதிலும் தனது அதானி எண்டெர்ப்ரைசஸ், எண்டிடிவி, அதானி க்ரீன் எனெர்ஜி, அதானி பவர், அதானி போர்ட் என பல கிளை நிறுவனங்கள் மூலம் ஏராளமான கோடி வர்த்தகத்தை செய்து வருகிறது. இதற்காக பல நாடுகளிலும் பல கோடிகளை அதானி நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்களின் முதலீடுகளையும் தங்கள் பால் அதானி நிறுவனம் ஈர்த்து வருகிறது. பல நாட்டு அரசுகளின் இன்சூரன்ஸ், வைப்புநிதி நிறுவனங்களும் அதானி போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்கின்றன.


அந்த வகையில் நார்வேயில் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி ஓய்வூதிய நிதி முதலீட்டிற்கு தகுதியான பன்னாட்டு நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடுகளை செய்து வருகிறது. அவ்வாறாக முதலீடு செய்ய தகுதி வாய்ந்த நிறுவனங்கள் என அந்நாட்டு வங்கி பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் இருந்து அதானி நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அதானி நிறுவனத்தின் அதானி போர்ட்ஸ் துறைமுக நிறுவனம் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதனால் அதானியில் முதலீடு செய்வது அபாயம் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதானி நிறுவனம் மீது இதற்கு முன்னர் பன்னாட்டு பங்குசந்தை ஆய்வு நிறுவனங்கள் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K