1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (17:09 IST)

பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு.. விசாரணைக்கு உத்தரவு..!

அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திய 62 வயது நபர் இரண்டு மாதத்தில் உயிர் இழந்ததை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 
 
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் சிறுநீரக கோளாறு உள்ள 62 வயது ரிக் என்பவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொருத்தினார். இது மருத்துவ உலகில் ஒரு பெரும் சாதனையாக கருதப்பட்டது. 
 
ஆனால் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரண்டே மாதங்களில் அவர் உயிர் இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்திற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தியது தான் காரணமா என்பது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இது குறித்து மருத்துவர்கள் கூறிய நிலையில் ’ரிக் உயிரிழந்தது மிகவும் வருத்தமாளிக்கிறது என்றும் ஆனால் மரபணு மாற்று   உறுப்பு சிகிச்சைக்கும், அவரது மரணத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தனர்..
 
 கடந்த 2022 ஆம் ஆண்டும் பன்றியின் இதயம் மரபணு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற ஒருவரும் இரண்டு மாதத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran