சீனாவில் பேருந்து விபத்து : பயணிகள் பலி !

china
Last Modified சனி, 3 நவம்பர் 2018 (20:01 IST)
சீனாவில் பேருந்து ஓட்டுநருக்கும் பயணம் இடையே கருத்து முரண்பாடு எழுந்ததால் இருவரும் ஓடும் பேருந்திலேயே தகறாரில் ஈடுபட்டதால் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது.  இதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர்.
சீனாவில் உள்ள காங்குவைன் என்ற இடத்தில் ஓட்டுநர் பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தார். அப்போது பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பயணி எதோ பேசியதாக தெரிகிறது.
 
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது முற்றி  பின் சண்டையிட்டனர்.  ஓட்டுநர் தன் பொறுப்பை மறந்து உணர்ச்சி பட்டதால்  போய் கொண்டிருந்த பாலத்தில் இருந்து பேருந்து தன்கட்டுப்பட்டை இழந்து  ஆற்றில் விழுந்தது.
 
இதில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
 
மேலும் இந்த விபத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :