1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (10:17 IST)

கோயம்பேடு போகாதீங்க? – இன்று முதல் தீபாவளிக்கு சிறப்புப்பேருந்து நிலையம்

தீபாவளிக்கு தமிழ்நாடு முழுவதும் 22000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ள நிலையில் இன்று முதல் வெளியூர் செல்லும் பேருந்துகள் சிறப்புப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
 

தீபாவளி சமயத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக வெளியூர் செல்லும் பேருந்துகளை 6 வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறப்பு பேருந்துகள் இன்று முதல் அந்த சிறப்புப் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மேலும் கனரக வாகனங்களை நகர்ப் பகுதிக்குள் மாற்றுப் பாதையில் வர வலியுறுத்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறப்புப் பேருந்து நிலையங்கள் மற்றும் செல்லும் ஊர்களுக்கான விவரம் பின்வருமாறு;_



மாதவரம் பேருந்து நிலையம்- ஆந்திரா செல்லும் பேருந்துகள்

கே கே நகர் பேருந்து நிலையம்– ECR  வழியாக புதுச்சேரி, கடலூர், சிதமபரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்- விக்கிரவாண்டி, பன்ரூட்டி வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்– திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம்– காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம்- மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.

இந்த சிறப்பு பேருந்துகள் இன்றிலிருந்து நவம்பர் 5-ந்தேதி வரை இந்த சிறப்பு பேருந்து நிலையங்களில் இயக்கப்படும் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.