புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (07:53 IST)

தேவாலயத்தில் குண்டு வெடிப்பு: 20 பேர் உடல் சிதறி பலி

பிலிப்பைன்சில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 20 அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டின் சூலு மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பல மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தேவாலயத்திற்குள் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடைபெற்றது. நிலைகுலைந்து போன மக்கள் சுதாரித்துக்கொண்டு தேவாலயத்திற்கு வெளியே ஓட முற்பட்டார்கள். அப்போது தேவாலய வளாகத்திலும் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அப்பாவி மக்கள் 20 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள். 

80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவர்களின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த நாச வேலையை செய்தது அபு சாயப் என்கிற பயங்கரவாத இயக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.