செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (22:14 IST)

ப்ளூ டிக் குளறுபடி, தவறான தகவல்கள்: ட்விட்டருக்கு முடிவுரை எழுதுகிறாரா ஈலோன் மஸ்க்?

elan twitter
ட்விட்டரை வாங்க உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் விருப்பம் தெரிவித்து இன்றுடன் கிட்டத்தட்ட ஓராண்டாகிறது.
 
அது இந்த வேலையில் என்னுடைய முதல் நாள். என்னுடைய தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை.
 
அந்த நாள் முதலே ட்விட்டர் நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்று என்னிடம் எத்தனை முறை கேட்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது நடக்காது என்றே நான் எப்போதும் சொல்லி வந்தேன்.
 
ஆனால், இப்போது சில காரணங்களால் அதனை அவ்வளவு நிச்சயமாக கூற முடியாது.
 
 
முற்றிலும் புதிய ட்விட்டரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி ட்விட்டரில் ப்ளூ டிக் என்பது அந்த கணக்கு குறிப்பிட்ட நபருடைய உண்மையான கணக்கு என்பதற்கானதாக இருக்கப் போவதில்லை. அவை எல்லாமே மாதச் சந்தா செலுத்தப்படுபவை.
 
பணம் செலுத்தப்படும் போது குறிப்பிட்ட கணக்கை சரிபார்க்கும் நடைமுறை இருந்தாலும், பெரும் அந்தஸ்துடைய தனி நபர்கள், நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகள் பணம் செலுத்தி ப்ளூ டிக் வைத்திருப்பதை காண முடிகிறது.
 
இம்மாத தொடக்கத்தில் தனிநபர் நிதி நிபுணர் மார்ட்டின் லீவிஸ் தன்னுடைய பெயரில் ப்ளூ டிக் கொண்ட ஒரு கணக்கில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்கு கிரிப்டோகரன்சி விளம்பரப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிரச்சியடைந்தார். ஏனெனில், அது அவரது உண்மையான கணக்கு அல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
 
ட்விட்டரில் இன்றைய நிலையில் பயனர்களால் தேர்வு செய்யப்படும் நபர்களைக் காட்டிலும் பணம் செலுத்தும் நபரே அந்த தளம் முழுவதும் தெரியவரக் கூடிய நபராக இருக்கிறார்.
 
அதனால், இனி வரும் நாட்களில் நம்மிடம் வந்து சேரும் புதிய ட்விட்டர் கணக்குகள் உண்மையில் யாருடையவை என்பதை நாம் காண விருக்கிறோம்.
 
ஈலோன் மஸ்க் கூறிய 'அனைவருக்கும் சம வாய்ப்பு' இதுதானா?
ஈலோன் மஸ்க் வசமாகும் முன்பு, ட்விட்டரில் யார்யார் முக்கியமானவர்கள் என்பதை தீர்மானிக்கும் முறை சரியானதாக இல்லை என்று அவர் கூறியிருந்தார். அவரது கூற்று ஓரளவு சரியாகவும் இருந்தது.
 
இன்று அவரது நேரடி மேற்பார்வையின் கீழ் சிலருக்கு மட்டும் ப்ளூ டிக் சரிபார்ப்பு இலவசமாக வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. புலனாய்வு தளமான பெல்லிங்கேட் நிறுவனர் தன்னுடைய நிறுவனமும் அவ்வாறு சரிபார்ப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று என்னிடம் உறுதி செய்தார்.
 
ட்விட்டரின் மாத சந்தா திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டீபன் கிங், லெப்ரான் ஜேம்ஸ், வில்லியம்ஸ் ஷாட்னர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் தாமே பணம் செலுத்தி இருப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 
ம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
 
வர்த்தகத்தைப் பொருத்தவரை, சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் மட்டுமே விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும், இல்லாவிட்டால் மாதத்திற்கு 1,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
 
டிஜிட்டல் விளம்பர வருவாயைப் பொருத்தவரை, பெருநிறுவனங்களைக் காட்டிலும் சிறிய, தொடர்ச்சியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் கூட்டுத்தொகையே அதிகம் என்று நமக்கு தெரியவருகிறது.
 
தன்னை பேச்சுரிமைக்கான காவலராக பறைசாற்றிக் கொள்ளும் ஈலோன் மஸ்க் தலைமையிலான ட்விட்டர், அதனை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குகிறதா என்பதை மேற்கூறியவை கேள்விக்குள்ளாக்குகின்றன.
 
மக்கள் பொதுவாக சமூகத்தை விட்டு விலகியிருக்க விரும்ப மாட்டார்கள். ட்விட்டர் மிகச்சிறியதாக, குழப்பமான ஒன்றாக இருந்தாலும் சமூகத்தில் செல்வாக்கும் செலுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
 
அது மிகவும் மோசமாக நடத்தப்படுகிறது. மற்ற தளங்களைப் போலவே அதன் நிதியும் இக்கட்டான நிலையில் இருந்தது. துஷ்பிரயோகம் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அது போராடியது.
 
கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்