வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2023 (15:29 IST)

எலான் மஸ்கிடம் பிரபல நடிகர் வைத்த கோரிக்கை....

Elon mUsk
டிவிட்டர் நிறுவனத்தை உலகின்  மிகப்பெரிய கோடீஸ்வரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பல அதிரடி முடிவுகள் எடுத்தார்.

அதன்படி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முதலில் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கடுத்து, டுவிட்டர் சமூகவலைதளம் பயன்படித்தி வரும் பிரபலங்களுக்கு புளூடிக் வழங்குவதற்கு மாதம் தோறும்ரூ.900  கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இம்மாதம்  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல்  இந்த நடைமுறைக்கு வந்தது.

தற்போது, சினிமா பிரபங்கள், விளையாட்டு பிரபலங்கள் , தொழிலதிபர்ககள் உள்ளிட்ட பலருக்கும்  பணம் கட்டாததால் இந்த புளூ டிக்  வழங்கப்படவில்லை.

இந்த நிலையில்,  இந்தி நடிகர் அமிதாப் பச்சன் புளூ நீக்கப்பட்டதும் தனக்கு திரும்ப புளூ டிக் வேண்டும்,  நீல தாமரையை திரும்ப தர வேண்டும். இதற்காக பணம் செலுத்திவிட்டேன் என்று  கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் புளூ டிக் கிடைத்துள்ளது.