1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

பெட்ரோல் விலை உயர்வால் கவிழ்ந்த ஆட்சி: உலகிலேயே முதல் முறை!

பெட்ரோல் விலை உயர்வால் கவிழ்ந்த ஆட்சி: உலகிலேயே முதல் முறை!
பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்ததால் உலகிலேயே முதல் முறையாக ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கஜகஸ்தான் என்ற நாட்டின் பிரதமரான அஸ்கர் என்பவர் ஆட்சி செய்து வரும் நிலையில் அந்நாட்டில் வாகன எரிபொருள் விலை உச்சத்திற்கு சென்றதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாகன எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிரான மக்களின் ஆவேசமான போராட்டத்திற்கு பணிந்து கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் என்பவர் பதவி விலகினார்
 
இதனை அடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
உலகிலேயே வாகன எரிபொருள் விலை ஏற்றத்தால் ஒரு அரசுகள் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.