1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (22:57 IST)

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது கைது வாரண்ட்

imrankhan
முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் மீது  கைது வாரண்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.   கடந்தாண்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஏப்ரல் மாதம் சுமார் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், அவர் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கிடைத்த பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில்,  லாசூர் நீதிமன்றம், இம்ரான்கானுக்கு ஜாமீனில்  வெளிவரமுடியா பிடிவாரண்ட்  பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து, இம்ரான்கான் வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானார்.

அதன்பின்னர்,. தொலைக்காட்சி மூலம் பேசிய இம்ரான்கான் ஆளும் அரசிற்கு எதிராக விமர்சனம் கூறினார். இதுதொடர்பாகவும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.

இதையடுத்து, பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இது இம்ரான்கான் கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.