Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீடு புகுந்து என்னை கற்பழித்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்


Murugan| Last Modified திங்கள், 30 அக்டோபர் 2017 (11:52 IST)
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை தற்போது கூறிவருகின்றனர்.  
 
சமீபத்தில், ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், மாடலுமான நடாசியா, ஒரு விழாவிற்கு சென்று பார்ட்டில் கலந்து கொண்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டதாகவும், அப்போது அவரின் அறைக்கு வந்த ஹார்வி,  அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.


 

 
இந்நிலையில், பிரபல நடிகை அன்னபெல்லா சியோராவும் வெயின்ஸ்டின் மீது புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
 
1992ம் ஆண்டு வெயின்ஸ்டின் எனது வீட்டிற்கு திடீரென வந்தார். அவரிடமிருந்து தப்பிக்க நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும், என் சினிமா வாய்ப்புகளையும் கெடுத்தார். இதனால் மூன்று வருடங்கள் நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன்” எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
 
ஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஹாலிவுட் நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார் கூறிவருவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :