Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை படுக்கையில் தள்ளி அந்த தயாரிப்பாளார்....கதறும் நடிகை


Murugan| Last Updated: சனி, 28 அக்டோபர் 2017 (08:48 IST)
தன்னை வலுக்கட்டாயமாக மிரட்டி தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னுடைன் உடலுறவு கொண்டதாக நடிகையும், மாடலுமான நடாசியா மால்தே அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

 

 
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை தற்போது கூறிவருகின்றனர். 
 
இந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், மாடலுமான நடாசியா அதிர்ச்சி பேட்டி ஒன்றை தெரிவித்துள்ளார்.


 

 
வெயின்ஸ்டீன் பற்றி பேசுவதற்கு தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. ஆனால், நண்பர்கள் கொடுத்த தைரியம் காரணமாகவும், என் 3 வயது மகனுக்காவும் இப்போது பேசுகிறேன். 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஃப்டா விருது விழாவுக்கான நான் லண்டனில் இருந்தேன். விருது விழா முடிந்தவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு வெயின்ஸ்டீன் உள்ளிட்ட பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்தேன்.  அதன் பின் என் அறைக்கு சென்றுவிட்டேன்.
 
அப்போது என் அறைக்கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. நான் பதறி எழுந்து அது யார் என பார்த்தேன். அப்போது, வெயின்ஸ்டீன் குடி போதையில் நின்று கொண்டிருந்தார். நான் அவருடன் தொடர்பு வைத்துள்ளேன் என மற்ற பிரபலங்கள் தவறாக நினைத்துவிடுவார்கள் என நினைத்து கதவை திறந்தேன். 


 

 
அறைக்குள் வந்ததும், தனது பேண்டை கழற்றிவிட்டு என் படுக்கையில் அமர்ந்தார். தன்னுடன் உறவு வைத்ததால்தான் அந்த நடிகைகள் எல்லாம் பிரபலமானார்கள் என பல நடிகைகளின் பெயர்களை கூறினார். மேலும், என்னை பலாத்காரம் செய்தார். ஆணுறை கூட அணியவில்லை. அந்த கொடூரத்தை அவர் செய்த போது நான் இறந்த பிணம் போல் கிடந்தேன்” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :