Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய சிறுமியை தத்தெடுத்து வளர்க்கும் அமெரிக்க பெண்மணி

orphan
Last Modified சனி, 2 டிசம்பர் 2017 (12:56 IST)
நாயால் கடியுண்டு தன் மூக்கை இழந்த ரூபா என்ற சிறுமியை அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் வில்லியம்ஸ்  என்ற பெண்மணி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
கிறிஸ்டன் வில்லியம்ஸிற்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. ஆனால் தான் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இதனால் இந்தியாவில் இருந்து குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்று  முடிவு செய்து பல்வேறு குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.
 
 
சிறுமி  ரூபாவின் மூக்கை நாய் கடித்து தின்று விட்டதால் அவரது முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் ரூபாவை வில்லியம்ஸ் தத்தெடுத்துள்ளார். ரூபாவுடன் சேர்த்து முனி என்ற சிறுமியையும் வில்லியம்ஸ் தத்தெடுத்துள்ளார். சிறுமி முனி முகத்தில் அதிக தழும்புகள் இருந்துள்ளது.தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதியை திரட்டியுள்ளார்.
 
அந்த நிதி உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ரூபாவின் மூக்கு ஓரளவுக்கு சரியாகியுள்ளது மற்றும் முனியின் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்துள்ளன. தற்போது இச்சிறுமிகள் இருவரும் நலமாக இருப்பதாக வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :