1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (12:02 IST)

பாகிஸ்தான் அரசு மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

போராட்டத்தைக் கையாள முடியாமல் பாகிஸ்தான் அரசு பலவீனமாக உள்ளது என அமெரிக்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடர்பாக சமீபத்தில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மதத்தின் பெயரில் கட்டாய உறுதிமொழி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. போராட்டத்தில் கலவரம் வெடித்து 6 பேர் பலியாகினர்.
 
சட்ட திருத்தத்திற்கு காரணமான அமைச்சர் சாஹித் அமீத் பதவி விலகியதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
 
அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை சமீபத்தில் நடந்த போராட்டம் வெளிச்சமிட்டு காட்டி உள்ளதாக விமர்சித்துள்ளார்.போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவு மோசமாக உள்ளது என்றார். போராட்டத்தால் பிரிவினைவாத அமைப்புகள் மேலும் ஊக்கம் பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளார். அவ்வாறு ராணுவ புரட்சி ஏற்பட்டால், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு பாதிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.