1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (11:51 IST)

எனது மரணம் இப்படி இருக்கனும்.. ஷாக்கில் உயிரைவிட்ட கைதி

அமெரிக்காவில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 1982 ஆம் ஆண்டு முதல் டேவிட் ஏர்ல் மில்லர் என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 
 
டேவிட் ஏர்ல் மில்லரின் ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. டென்னிசி மாகாணத்தில் பொதுவாக விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதுதான் வழக்கம். 
 
ஆனால், விஷ ஊசி போட்டு மரண தணடனை வழங்கப்பட்டால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என டேவிட் ஏர்ல் மில்லர் கேட்டுக்கொண்டார். 
 
அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு, டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சகோர்ஸ்கி என்கிற கைதிக்கும், இதே போன்று மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.