1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (11:43 IST)

மனநல மருத்துவரை கத்தியால் குத்திக் கொன்ற நோயாளி

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டியை நோயாளி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி, அமெரிக்காவில் குடியேறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த கிளினிக்கில் யோகப் பயிற்சிகள் மூலம் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அவர் நோயாளி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதையடுத்து அச்சுதா ரெட்டியை கொலை செய்தவரை கான்சாஸ் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு 7 மணியளவில் நோயாளி ஒருவர் அச்சுதா ரெட்டி கிளினிக்கிற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் ரெட்டியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மேலாளர் நோயாளியை தடுக்க முயற்சித்தார்.
 
அப்போது ரெட்டி அங்கிருந்து ஓடி தப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நோயாளி விடாமல் ரெட்டியை துரத்தி பிடித்து மீண்டும் வெறிதனமாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரெட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 
 
மேலும் காவல்துறையினர் கொலை செய்த நோயாளியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.