1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (16:52 IST)

வடகொரிய இறக்குமதியை 90% குறைக்க அமெரிக்கா வியூகம்?

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 
 
இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. 
 
இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது. இருப்பினும் வடகொரியாவும் சலிக்காமல் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், வடகொரியாவின் பெட்ரோல் இறக்குமதியை 90% வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
 
வடகொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.