உரிமையாளரை கடித்து கொன்ற நாய்கள்

bite
Last Modified புதன், 20 டிசம்பர் 2017 (14:20 IST)
வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்கள் அதன் உரிமையாளரை கடித்து கொன்றுள்ளது. 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேத்தே ஸ்டீபன்ஸ்(22)  என்ற பெண் வசித்து வந்தார். அவர் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் ஸ்டீபன்ஸ் கடந்த  கடந்த வாரம் தனது இரண்டு வளர்ப்பு நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நியூயார்க் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். போலீஸார் அவரின் உடலை சிதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் ஸ்டீபன்ஸ்  வளர்த்த நாயே அவரை கடித்து கொன்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
சிறு வயதிலிருந்து வளர்த்த சொந்த நாய்களே அதன் உரிமையாளரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :