ஏஐ டெக்னாலஜியில் கூகுள் மேப்.. வேற லெவலில் இனி ரிசல்ட்..!
கூகுள் மேப் பயன்படுத்துபவர் சிலர் தவறான வழிகாட்டுதல் காரணமாக சிக்கலில் தவித்ததாக அவ்வப்போது செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ டெக்னாலஜி மூலம் கூகுள் மேப் செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை கூகுள் மேப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேடினால், அந்த இடம் குறித்த தகவல்கள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் வழிகள் கிடைக்கும். ஆனால் கூகுள் மேப்பில் இனிமேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதால் உரையாடல்கள் மூலம் நீங்கள் தேவையான தகவல்களை பெறலாம்.
மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று உரையாடினால் உடனே அதற்கு ஏற்றவாறு அருகாமையில் உள்ள மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகம் இருக்கும் இடங்களை காட்டும்.
ஒரு கேள்வியோடு நின்று விடாமல் உரையாடல் போல் உங்கள் தேடல்கள் குறித்து கூடுதல் விவரங்களையும் இனி கூகுள் மேப்பில் கேட்டு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 250 மில்லியன்களுக்கு மேலான இடங்கள் குறித்த தகவல்களை கூகுள் மேப்பில் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva