35 ஆண்டுகளுக்குப் பிறகு காதலியை கரம் பிடித்த காதலன் !
35 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காதலித்த பெண்ணைக் கரம் பிடித்துள்ளார் ஒரு நபர்.
சினிமாவிலும் நாவலிமும், காவியத்தில் மட்டும்தான் பல ஆண்டுகள் கழித்து தான் காதலித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைப் பார்க்க முடியும் என்றில்லை.
இந்த உலகில் நிஜமாலும் இந்த மாதிரியான சம்பவத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு ஒரு நிஜமான சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள ஹாசன்மாவட்டத்தில் வசிப்பவர் சிக்கண்ணா என்ற முதியவர் இளம் வயதில் ஜெயம்மா என்பவரை இளம்வயதில் காதலித்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு வீட்டார் எதிர்ப்பு தெரிக்கவே, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் 4 ஆண்டுகளிலேயே அவருடன் கருத்து வேறுபாடு கரணமாக பிரிந்து விட்டதாகத் தெரிகிறது.
அதேசமயம் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்த சிக்கண்ணா ஜெயம்மாவின் தன் விருப்பத்தை வெளிப்படுத்தவே, 35 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.