புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (17:56 IST)

காதலனுக்கு இதயத்தை பரிசளித்த காதலி...

தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மெரலைஸ் தனது காதலனுக்கு ஒட்டகச் சிவிங்கியின் இதயத்தை பரிசளித்துள்ளார்.

இந்த உலகத்தில் காதலவர்கள் கண்களுக்கு எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை. காதல் செய்யும்போது,தன் காதல் மட்டுமே தெரியும். அதனால்தான் என்னவோ காதலுக்கு கண்ணில்லை என்று கூறினார்கள் போலும்.

தென்னாப்பிரிக்காவில் ஒரு அதிர்ச்சிகரமாக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில், ஒரு இளம் பெண் காதலர் தினத்தன்று  தன் காதலனுக்கு வித்தியாசமாகப் பரிசளிக்க எண்ணி ஒட்டகச் சிவிங்கியின் இதயத்தைப் பரிசளித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளார்.

மேலும், இளம்பெண் மெரலைஸ் காட்டில் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி இதயமே இல்லாமல் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார். இதற்காக ரூ.1.5 லட்சம் செலவழித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.