1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (13:29 IST)

திரெளபதி முர்முவுக்கு பாமக ஆதரவு: அன்புமணி ராமதாஸ் தகவல்

Anbumani
அடுத்த மாதம் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக சார்பில் திரெளபதி முர்மு என்பவரும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்கா என்பவரும் களத்தில் உள்ளனர்
 
இரு தரப்பினரும் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் திரெளபதி அவர்களுக்கு பாமக ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே அதிமுக உள்பட ஒரு சில கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு இருக்கும் நிலையில் தற்போது பாமகவும் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திரெளபதி முர்மு அவர்களுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவர் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது.