செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (18:33 IST)

பாகிஸ்தானுக்கு சென்ற ஆப்கானிஸ்தான் துணை கவர்னர் கடத்தல்

பாகிஸ்தானுக்கு சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாண துணை கவர்னரை பொஷாவர் நகரில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.


 

 
ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் உள்ள பாகிஸ்தான் பொஷாவர் நகரில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலர் மருத்துவ சிகிச்சைக்காகவும், தொழில் ரீதியாகவும் வந்து செல்வதுண்டு.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து பொஷாவர் நகருக்கு வந்த ஆப்கானிஸ்தான் குனார் மாகாண துணை கவர்னர் கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். தற்போது அவரை மீட்கும் பணியில் பொஷாவர் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
 
துணை கவர்னர் எந்த முன்னறிவிப்பும் இன்றி பாகிஸ்தான் சென்றுள்ளார். பொஷாவர் நகர காவல்துறையினர், துணை கவர்னர் வருகை குறித்து அறிவித்து இருந்தால் உரிய பாதுகாப்பு அளித்திருப்போம் என்றனர். 
 
இந்த கடத்தலுக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.