பிணவறையில் வைக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்த அதிசயம்

Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (15:25 IST)
ரஷ்யாவில் பிணவறையில் வைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் பெண் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். அங்கு வந்த காவல் துறையினர் அந்த பெண் இறந்துவிட்டதாக கூறி, அந்த பெண்ணை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பிணவறையில் அந்த பெண் திடீரென எழுந்து உட்கார்ந்தார். உடனடியாக மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
அந்த பெண்ணை மீட்டபோதே மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் இறந்துவிட்டார் என கூறிய போலீஸ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :