புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (12:44 IST)

10 ஆயிரம் ரூபாயில் மொத்த திருமண செலவையும் முடித்த நபர்

பாகிஸ்தானில் நபர் ஒருவர் வெறும் 10000 ரூபாய் செலவில் தனது திருமணத்தை செய்து முடித்துள்ளார்.
ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் மண்டபம், பத்திரிக்கை, சாப்பாடு செலவு, ஸ்டேஜ் டெக்கடேஷன், ஆட்கஸ்ட்ரா என எக்கச்சக்கமாய் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு திருமணத்தை நடத்த வேண்டுமென்றால் குறைந்தது 5 லட்சம் தேவை.
 
அப்படி இருக்கும் வேளையில் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது திருமணத்தை தனது வீட்டின் மாடியில் வைத்து நடத்தியுள்ளார். பெற்றோர், நண்பர்கள் என 25 பேர் மட்டுமே இவர்களின் திருமணத்தில் பங்குபெற்றார்கள். வீட்டில் செய்யப்பட்ட உணவுகள் மட்டுமே இவர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த திருமணத்திற்கான செலவு வெறும் 20 ஆயிரம் மட்டுமே(நம் நாட்டு பண மதிப்பின்படிரூ. 10,000 மட்டுமே). . இவரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.