பாகிஸ்தானிலும் '2.0' ஜூரம்: விறுவிறுப்பான முன்பதிவு என தகவல்

Last Modified திங்கள், 26 நவம்பர் 2018 (22:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் இந்தியாவில் வெளியாகும் அதே தினத்தில் பாகிஸ்தானிலும் வெளியாகவுள்ளது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த படத்திற்கு விறுவிறுப்பாக முன்பதிவு ஆகி வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள அக்சயகுமார், பாகிஸ்தானில் ஏற்கனவே பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் படங்கள் பாகிஸ்தானில் வெளியாவது வழக்கமான ஒன்றே. ஆனால் தென்னிந்திய படங்களை பொறுத்தவரையில் 'பாகுபலி'க்கு பின் பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி கூட இந்தியாவில் ரிலீஸான சில மாதங்கள் கழித்தே பாகிஸ்தானில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :