செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (12:40 IST)

சிரியா உள்நாட்டு தாக்குதலுக்கு எதிராக களமிறங்கிய சிறுவன்: பதற வைக்கும் வீடியோ

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு சிறுவன் ஒருவன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தீவிரமடைந்துள்ள இந்த சண்டையில் பள்ளிகள், வீடுகள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏராளமான குழந்தைகள் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 600-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
 
இந்நிலையில் சிரியா நாட்டு சிறுவன் ஒருவன் போர் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளான், அதில் என் பெயர் முகமத் நஜிம். எனக்கு 15 வயது ஆகிறது. நான் பஷார் அல் ஆசாத் செய்யும் கொடுங்செயல்களை பற்றி உங்களிடம் தெரிவிப்பதற்கு வந்துள்ளேன். இங்கு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. ஆண், பெண், சின்னஞ்சிறு குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் சிரிய அரசையும், ரஷ்ய அரசையும் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.பஷார் அல் ஆசாத், புதின், கொமைனி போன்ற தலைவர்கள் எங்களின் குழந்தைப் பருவத்தைப் கொல்கிறார்கள். ஏற்கனவே தாமதமாகிவிட்டது எங்களை காப்பாற்றுங்கள் என அந்த சிறுவன் வீடியோவில் தெரிவித்துள்ளான்.




 


Thanks: Guardian News