ஞாயிறு, 16 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (00:17 IST)

பிரான்ஸில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரில் உள்ள வோல்ஸ் என் வெலின் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரில் உள்ள வோல்ஸ் என் வெலின் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்தக் குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, அங்கு குடியிருப்போர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சுமார் 170 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, குடியிருப்புகளில் இருந்தவர்களை மீட்கும்  நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த விபத்தில். 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் தீக் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 4 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited By Sinoj