1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:08 IST)

தமிழகத்தில் துணை முதலமைச்சர் வேண்டும்: வானதி ஸ்ரீனிவாசன்

vanathi
தமிழகத்தில் பட்டியல் இனத்தவர் ஒருவர் துணை முதலமைச்சராக வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 
 
திமுக என்பது ஒரு குடும்பத்துடன் மட்டும் தொடர்வதுதான் அரசியல் வாரிசாக உள்ளது என்றும் அதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக கருணாநிதி இருந்தார் என்றும் அவரது மறைவுக்கு பிறகு திமுக தலைவர் முக ஸ்டாலின் இருக்கிறார் என்றும் அதன் பிறகு அவரது மகன் அமைச்சராகி உள்ளார் என்றும் இந்திய வரலாற்றில் 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது திமுக மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை திமுக துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva