செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (18:10 IST)

காணாமல் போன 5000 பேரின் நிலை என்ன?

கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிசியாவில் உள்ள சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. 
 
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. 
 
வீடுகளை இழந்த மக்கள் முகாம்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது மேலும் பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுப்பட்டுள்ளனர். 
 
பலு நகரில் பலரோ மற்றும் பெடோபோ பகுதிகளில் காணாமல் போனவர்களில் 1000 பேர் அங்குள்ள 3 மீட்டர் ஆழமுள்ள சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 74 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 
 
இதைத்தொடர்ந்து சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிகிறது.