1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (08:22 IST)

எரிசாராயம் குடித்த 35 பேர் – மெக்ஸிகோ மதுப்பிரியர்களின் அவல நிலை!

மெக்ஸிகோவில் எரிசாராயம் குடித்த 35 பேர் பலியாகி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மது கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் கள்ளச்சந்தையில் கிடைக்கும் எரிசாராயத்தை வாங்கிக் குடிக்கவும் அவர்கள் அஞ்சுவதில்லை.

இதே போல மெக்ஸிகோ நாட்டில் இரு வேறு இடங்களில் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை வாங்கிக் குடித்த 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் இதுவரை 42,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 4,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.