திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (08:16 IST)

மதுவுக்கு 70% வரி: முதல்வரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள்

மதுவுக்கு 70% வரி
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றாக நாடு முழுவதும் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக மதுவை வாங்காமல் இருந்த மது பிரியர்கள் முண்டி அடித்துக்கொண்டு சமூக விலகலை கூட கடைப்பிடிக்காமல் மது வாங்க நீண்ட வரிசையில் நின்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக ஒரு அறிவிப்பு செய்துள்ளார். அதன்படி இன்று முதல் அனைத்து மதுவகைகளுக்கும் உச்சபட்ச விலையிலிருந்து 70 சதவீதம் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானங்களின் விலை 1700 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
70% வரி என அறிவித்ததால் மதுவை அதிகமாக வாங்குபவர்கள் குறைவாக வாங்குவார்கள் என்றும் அப்படியே அதையும் மீறி அவர்கள் அதிகமாக வாங்கினால் டெல்லி அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் டெல்லி அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முடிவை அனைத்து மாநில முதல்வர்களும் எடுக்க வேண்டுமென்று ஒருசில தெரிவித்து வருகின்றனர். ஆனால் சமூக ஆர்வலர்களோ 70 சதவீதம் வரை பத்தாது என்றும் 700% வரி விதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது