1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (18:35 IST)

1730 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரண்: முடிவுக்கு வருகிறதா போர்?

Ukraine
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் 1730 பெயர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
கடந்த திங்கட்கிழமை உருக்காலை ஒன்றில் பதுங்கி இருந்த உக்ரைன் வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது 
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் வீரர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்ய ராணுவம் விரைவில் அவர்களை விடுதலை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது 
அதுமட்டுமின்றி காயமடைந்த உக்ரைன்  வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தின் பலம் படிப்படியாக குறைந்து வருவதால் விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது